சர்ச்கார்னர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.

சர்ச்கார்னர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம்.
சர்ச்கார்னர் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். இருவர் படுகாயம். கரூர் மாநகராட்சி வடக்கு காசிம் தெருவை சேர்ந்தவர் அஸ்வர் முகமது வயது 20. ஜூன் 21 ஆம் தேதி இரவு 11:40 மணியளவில் கரூர் ஐந்து ரோடு சாலையில் சர்ச் கார்னர் அருகே சென்ற போது எதிர் திசையில் பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்த மதன் வயது 28 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் அஸ்வர் முகமது டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது, பலத்த காயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக அஸ்வர் முகமது அளித்த புகாரில் மதன் மீது வழக்கு பதிவு செய்தனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story