ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளி- பிஎஸ்ஆர் பினாக்கல் கிளாசஸ் பயிற்சி மையம் இணைந்து நடத்திய நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளி- பிஎஸ்ஆர் பினாக்கல் கிளாசஸ் பயிற்சி மையம் இணைந்து நடத்திய நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
X
ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளி- பிஎஸ்ஆர் பினாக்கல் கிளாசஸ் பயிற்சி மையம் இணைந்து நடத்திய நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் பள்ளி- பிஎஸ்ஆர் பினாக்கல் கிளாசஸ் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி மையம் இணைந்து நடத்திய நீட் தேர்வு பயிற்சி சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு வி்ழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்பள்ளியின் பயிற்சி மையத்தில் ஒராண்டு நீட் பயிற்சி பெற்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஏ.அபினேஸ்குமார் 612 மதி்ப்பெண்கள் பெற்றுள்ளார். இப்பயிற்சி மையத்தில் சிறந்த மதிப்பெண் பெற்றுள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், 2025-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வு கடினமானதாக இருந்தாலும், சிறந்த பயிற்சியின் மூலம் இந்த மதிப்பெண்கள் பெறமுடிந்தது. எம்பிபிஎஸ் முடித்து மேற்கல்வியில் இருதய நோய் மருத்துவராக வேண்டும் என்பது விருப்பம் என தெரிவித்தார். இது போல் அரசு மாதிரி பள்ளியில் பயின்று ஒராண்டு பயிற்சி பெற்ற தருமபுரி மாணவர் ச.அபுபக்கர் சித்திக் 500 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் 7.5. சத இட ஒதுக்கீட்டு முன்னனி மருத்துவக்கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். இதே போல் பள்ளியில் பயின்ற போது எந்த வித நீட் பயிற்சியும் இல்லாத நிலையில் பயிற்சி மையத்தில் ஒராண்டு படித்து நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் பள்ளியின் நிர்வாகத்தினர் பி.சுவாமிநாதன், ஏ.ராமசாமி, எஸ்.செல்வராஜன், எம்.குமரவேல், பிஎஸ்ஆர் பினாக்கல் கிளாசஸ் நிர்வாக இயக்குனர் பி.சாய்ராம் உள்ளிட்டோர் பாராட்டி நினைவு பரிசளித்து கெளரவித்தனர்.
Next Story