கோவில் கும்பாபிஷேகத்திற்கு நிதி உதவி வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்

மதுரை அருகே கோவில் கும்பாபிஷேகத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் நிதி உதவி வழங்கினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்கு மாவட்டம் தே.கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லியதேவன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவிற்கு இன்று ( ஜூன்.23) மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் அவர்கள் ருபாய் 1,00,000 நன்கொடை வழங்கினார். உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் இருந்தனர்.
Next Story