பரமத்தி வேலூரில் மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு பதிவு

X

பரமத்தி வேலூரில் மருமகளை தாக்கிய மாமியார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர், ஜூன்.23: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நல்லியாம்பாளையம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (36). இவரது மனைவி கவிபிரியங்கா(34) இவர்களுக்கு விக்ரம் (3) என்ற ஒரு மகன் உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி சுமார் 6 வருடம் ஆகிறது. 6 வருடங்களாக கவிபிரியங்கா அவரது கணவர் பிரபாகரன் மகன் விக்ரம் ஆகிய மூவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இதனிடையே குடும்ப தகராறு காரணமாக கவிபிரியங்காவிற்கு தெரியாமல் பிரபாகரன் அமெரிக்காவில் இருந்து பரமத்தி வேலூருக்கு வந்து விட்டார். கணவர் வந்த ஒரு வாரத்தில் கவிபிரியங்காவும் தனது குழந்தையுடன் கணவர் வீடான நல்லியாம்பாளையம்புதூர் வந்துள்ளார். வீட்டிற்கு வந்த மனைவியை அவரது கணவரும்,மாமியார் ராசம்மாளும் வீட்டிற்குள் வராதே மகனுடன் வெளியே போய் விடு என்று தரக்குறைவாக திட்டியுள்ளனர். பின்னர் 2 வாரத்திற்கு பிறகு மீண்டும் கவிபிரியங்கா தனது குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் மாமியார் மருமகளை மீண்டும் தரக்குறைவாக திட்டி விட்டு நீ இங்கிருந்தால் நான் வீட்டில் இருக்கமாட்டேன் என்று கூறி விட்டு எனது கணவர் பிரபாகரை அழைத்து கொண்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி கவிபிரியங்கா தனது வீட்டில் மகன் விக்ரமிற்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அப்போது வந்த மாமியார் ராஜம்மாள் மற்றும் மற்றும் அடையாளம் தெரியாத 7 பேர்கள் வீட்டில் இருந்த கேமராவை உடைத்து விட்டு வீட்டிற்குள் புகுந்து கவிபிரியங்கா, அவரது தாய் மற்றும் சகோதரர் சம்பத்குமார் ஆகியோரை தரக்குறைவாக திட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த கவிப்பிரியங்கா வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட் டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கவிப்பிரியங்கா வேலூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story