வேலூர் பேரூராட்சி பெண் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.

X

வேலூர் பேரூராட்சி பெண் தலைவருக்கு எதிராக 17 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.
பரமத்திவேலூர்,ஜூன் 25: வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத் தம் 18 வார்டுகள்உள்ளன. இப் பேரூராட்சியில் தி. மு.கவை சேர்ந்த லட்சுமி முரளி தலைவராக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகின் றார். இந்த நிலையில் வேலூர் பேரூராட்சிதலை வர்லட்சுமி முரளிக்கு எதிராக தி.மு.கவைச் சேர்ந்த பேரூராட்சி துணைத்தலைவர் ராஜா தலைமையில் தி.மு.கவை சேர்ந்த 12 உறுப்பினர்களும், அ.தி.மு.கவை சேர்ந்த 2 பேரும், பா.ம.க மற்றும் சுயேட்சை என தலா ஒருவரும் மொத்தம் 16 பேரூராட்சி மன்ற உறுப்பினர்க ளும் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகத்திடம் நேற்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் பேரூராட்சிதலைவர் லட்சுமி முரளிக்கு எதிராக பேரூராட்சி மன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் மேலும் அன்றே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மேலும் பேரூராட்சி நிர்வாகத்தில் தலைவரின் கணவர் முரளியின் தலையீடு இருப்பதாகவும், விருப்பப்பட்டவர்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவது போன்ற காரணங்களை அடுக்கடுக்காக பேரூராட்சி தலைவருக்கு எதிராக பேரூராட்சி கவுன்சிலர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். தி.மு.க வை சேர்ந்த பேரூராட்சி தலைவருக்கு எதிராக தி.மு.க வை சேர்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது தி.மு.க வினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Next Story