தொடக்க கூட்டுறவு வங்கிகளில் ப்ளூடூத் முறையை ரத்து செய்ய கோரி போராட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கிகளில் ப்ளூடூத் முறையை ரத்து செய்ய கோரி போராட்டம்
திருவள்ளூரில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ப்ளூடூத் முறையை ரத்து செய்தல் எடை குறைவு உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் தியாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஈடுபட்டனர். ப்ளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு கருவிழி திரை மூலம் விற்பனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதால் அந்த ப்ளூடூத் முறை ரத்து செய்ய வேண்டும் அரசு வாணிபக் கழக குடோன்களில் இருந்து நியாய விலை கடைகளுக்கு குறைவாக பொருட்கள் வருவதால் அதை உரிய முறையில் எடை போட்டு அனுப்ப வேண்டும் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும் விற்பனையாளர்கள் இருப்பிடத்திலிருந்து குறைந்தபட்ச தூரத்தில் பணி மாறுதல் பணி அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷம் எழுப்பினர் அரசு தங்களது எட்டம்ச கோரிக்கைகளுக்கு தீர்வுக்கான முன் வர வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் வருகிற ஜூலை 14ஆம் தேதி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பி எஸ் தியாகராஜன் தெரிவித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊத்துக்கோட்டை கும்மிடிப்பூண்டி பொன்னேரி மீஞ்சூர் அனுப்பம்பட்டு தேவன் பட்டு பழவேற்காடு மாதர் பாக்கம் உள்ளிட்ட கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் பெண் ஊழியர்கள் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் திரளாக பங்கேற்றனர்
Next Story