புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என விழிப்புணர்வு

புகையிலை தடை  செய்யப்பட்ட பகுதி என விழிப்புணர்வு
X
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
. குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பாக, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை எனும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை குறிக்கும் வகையில், அரசு கலை கல்லூரி அருகே புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என சாலையில் பெயிண்டால் எழுதி விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அனைத்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மற்றும் போதை பொருள் தடுப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார் செய்திருந்தார்.
Next Story