பாண்டமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு.

பாண்டமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு.
X
பாண்டமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே கண்காணிப்பு கேமராக்கள் உடைப்பு போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர், ஜூன்.29:       பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகம் அருகேவைக்கப்பட்டிருந்த கண்கா ணிப்பு கேமராக்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேர் கண்காணிப்பு கேமராக்களை உடைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சிலரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story