மூதாட்டி மீது டூவீலர் மோதி மூதாட்டி பலி

மூதாட்டி மீது டூவீலர் மோதி மூதாட்டி பலி
X
குமாரபாளையம் அருகே மூதாட்டி மீது டூவீலர் மோதி மூதாட்டி பலியானார்.
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் சரஸ்வதி, 65. இவர் நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் கல்லங்காட்டுவலசு பஸ் ஸ்டாப்பில் நடந்து சாலையை கடந்தார். அப்போது அவ்வழியாக வந்த பல்சர் டூவீலர் ஓட்டுனர், இவர் மீது மோதியதில், பலத்த காயமடைந்தார். இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர். இவரை பரிசோத்தித்த டாக்டர் இவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான பல்சர் வாகன ஓட்டுனர், மோடமங்கலத்தை சேர்ந்த பாலசுப்ரமணி,43, என்ற ஜவுளி தொழில் செய்பவரை கைது செய்தனர்.
Next Story