வேலூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் பேரூராட்சி நிர்வாகம் அறிவுரை.

வேலூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் பேரூராட்சி நிர்வாகம் அறிவுரை.
X
திகரிப்பால் தண்ணீர் திறக்க வாய்ப்பு வேலூர் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் பேரூராட்சி நிர்வாகம் அறிவுரை.
பரமத்திவேலூர், ஜூன்.29:    வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்படும் போது வேலூர் காவிரி ஆற் றின் இரு கரைகளையும் தொட்டபடி செல்லும்போது தண்ணீரின் வேகம் அதிகமாகவும் இருக்கும். எனவே பொது மக்களின் நலன் கருதி வேலூர் காவிரி ஆற்றில் குளிக்கவும், துணிகள் துவைக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லவேண்டாம். மேலும் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story