வெளி மாநில லாட்டரி விற்ற ஒருவர் கைது

வெளி மாநில லாட்டரி விற்ற ஒருவர் கைது
X
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்ற வழக்கில் ஒருவர் கைது செய்யபட்டார்.
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார், லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சவுந்தரராஜன், 39, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
Next Story