தே.மு.தி.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தே.மு.தி.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
X
குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நகர செயலர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. நகர அவைத்தலைவர் ரவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் இளங்கோவன் மாவட்ட செயலாளர் விஜய் சரவணன், மாவட்ட பொருளாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் மகாலிங்கம் பங்கேற்று கழக வளர்ச்சிகள் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை, பி எல் 2 படிவம், பூத் கமிட்டி அமைப்பது குறித்து பேசினார்கள். இதில் கள்ள லாட்டரி விற்பனை தடுக்க வேண்டும், 24 மணி நேர மது விற்பனை தடுக்கக் வேண்டும், குமாரபாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும், போதுமான வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகள் சாயக்கழிவு நீரால் கேன்சர் பரவுவதால், விதி மீறும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திருச்செங்கோடு வருகை தரும் பொதுச்செயலர் பங்கேற்கும் கூட்டத்திற்கு ஆயிரம் பேர் பங்கேற்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாகிகள் நாகமணி, செல்வகுமார், ஆறுமுகம், ராசு, சங்கர், சாந்தி, சத்யா சந்திரகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story