தேசிய கனிம வளம் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கவுன்சில் சார்பில் மனு

X

கனிம வளத்தை பாதுகாக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேசிய கனிம வளம் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கவுன்சில் சார்பில் மனு அளிக்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கனிமவளம் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு கவுன்சில் சார்பில் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அனுமதியில்லாமல் மண் குவாரிகள் மற்றும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது அப்படி அனுமதி பெறாமல் நடைபெறும் குவாரிகளால் எடுக்கப்படும் கனிம வளங்களுக்கு முறையான கட்டணமோ அனுமதி ரசீதோ எடுத்துச் செல்லும் வாகனத்திற்கு முறையான அனுமதிச்சீட்டும் இல்லாமல் நாள் ஒன்றுக்கு தாலுக்கா வாரியாக லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு கடத்தல் நடைபெற்று வருகிறது. அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அரசு அனுமதியின்றி முறைகேடாக மண் மற்றும் கல்குவாரிகள் செயல்படுவதால் தமிழகத்தில் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் அபாயம் உள்ளது ஆகவே மண் குவாரிகள் மற்றும் கல்குவாரிகளை முறையாக ஒழுங்குபடுத்தி கனிம வளங்களை காப்பாற்றுமாறு மனு கொடுத்தனர்.
Next Story