அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
X
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம்.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. நத்தம்.விசுவநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விஜய் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவரா? என்பதை தற்போது கூற இயலாது. அரசியல் களத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். திருமாவளவன் ஒரு நாளைக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பவர். அவர் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அது ஒரு போதும் நடக்காது. தி.மு.க.வுக்கு தமிழகத்தில் 10 சதவீத வாக்கு வங்கி கூட கிடையாது. கூட்டணி மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவை வைத்துக் கொண்டு தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று கூறி வருகின்றனர் என தெரிவித்தார்.
Next Story