தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சமூக பாதுகாப்பு மாநாடு

X

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சமூக பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது
திண்டுக்கல் பேகம்பூர் தோமையார் புரம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சமூக பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில தலைவர் அப்துல் கரீம், மாநில தணிக்கை குழு தலைவர் சுலைமான் ஃபிர்தௌஸி, மற்றும் மாநில செயலாளர் முகமது ஒலி, மாநில பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாநாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவாக மாவட்டச் செயலாளர் ஜவகர் நன்றியுரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் அப்துல் கரீம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் ;-. மாணவர்கள் இளைஞர்கள் போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகுவதை தமிழக அரசும் காவல் துறையும் தீவிரமாக கண்காணித்து இளைய சமுதாயத்தை காக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். இந்தியா முழுவதும் மத்திய பாஜக அரசும் ஆர் .எஸ் .எஸ்.ம் , இந்து முன்னணியும் இஸ்லாமிய வெறுப்புகளை பரப்பிக் கொண்டு வருகிறது. இந்தியாவிலேயே மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழகத்திலும் கூட மதவெறுப்பு பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்து வருகிறது. அண்மையில் மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. 2050க்குள் முஸ்லிம்கள் பெருவாரியாக அதிகரித்து விடுவார்கள். என தனது கவலையை பதிவு செய்கிறார். முருக பக்தர்கள் மாநாட்டுக்கும், முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் என்ன சம்பந்தம். அந்த மாநாட்டில் பேசு பொருளாக இருப்பதன் அவசியம் என்ன. தமிழகத்தில் எத்தனையோ ஆன்மீக மாநாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் அவரது நம்பிக்கையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் யாரும் எந்த ஒரு இடையூறும் செய்ததில்லை. ஆனால் இந்த மாநாட்டில் முஸ்லிம்கள் வெறுப்பு பேச்சு அதிகமாக இருக்கிறது. அமைதி பூங்காவாக இருக்கும் தமிழக மக்கள் மத்தியில் மத வெறுப்பையும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விடும் இந்த பேச்சுக்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆபத்து நிறைந்த பேச்சுகளாக பார்க்கிறோம். தமிழக அரசு தமிழகத்தில் இந்த மத வெறுப்பு பேச்சுக்களை தலை தூக்குவதற்கு இடம் அளிக்கக் கூடாது. மத்திய பாஜக அரசு முஸ்லிம்களின் வழிபாட்டில் கை வைக்கிறார்கள். இந்தியாவில் பத்தாயிரம் மசூதிகளுக்கு மேல் இருக்கிறது. அவைகள் கோவில்கள் இடிக்கப்பட்டு மசூதிகளாக கட்டப்பட்டுள்ளது. அவையெல்லாம் இடிக்கப்பட வேண்டும். அதுதான் நமது இலக்கு. என்று வெளிப்படையாகவே சங் பரிவார் அமைப்புகள் பிரச்சாரங்கள் செய்து இந்தியாவில் அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டம் ஒன்று உள்ளது. இதனை நீதிமன்றங்கள் ஏன் இந்த பேச்சுக்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. வக்பு சட்டத் திருத்தத்தின் மூலமாக பள்ளிவாசல் நிர்வாக உரிமையை எங்களிடம் இருந்து மத்திய பாஜக அரசு பறிக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம். இந்து மக்கள் அவர்களது ஆலயங்களை நிர்வாகம் செய்யலாம். கிறிஸ்தவர்கள் அவர்களது தேவாலயங்களை நிர்வாகம் செய்யலாம். ஆனால் முஸ்லிம்கள் தங்களது பள்ளிவாசல்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு உட்பட்ட சொத்துக்களை நிர்வாகம் செய்ய உரிமை இல்லை என்றால் அது நியாயமா. இது மதச்சார்பற்ற நாடு என்பதற்கு அடையாளமா. எங்களுடைய வழிபாட்டு உரிமை எங்களுடைய சொத்துக்களை நாங்களே நிர்வகிக்கும் உரிமை அப்பட்டமாக முஸ்லிம்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. இவற்றைக் கண்டித்தும் வக்பு திருத்தச் சட்டம் என்ற பெயரில் வக்பு சொத்துக்களை கொள்ளையடிக்க கூடிய அந்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருட்களின் ஹப்பாக வடமாநிலங்கள் இருக்கிறது. தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற அம்பானி அதானி போன்றவர்களுக்கு தாரைவாக்கப்பட்ட துறைமுகங்கள் மூலமாக டன் கணக்கில் போதைப் பொருள்கள் எல்லா மாநிலங்களிலும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் போதைப் பொருட்கள் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் மாணவர்களிடையே போதை பழக்கவழக்கம் இருக்கிறது. அதிலும் சினிமா நடிகர்கள் கூட சிக்கியுள்ளனர். இதை தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி போதையற்ற சமூகத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
Next Story