காங்கிரஸின் அவசர கால கொடுமைகளை விளக்கும் நிகழ்வு

X

காங்கிரஸின் அவசர கால கொடுமைகளை விளக்கும் நிகழ்வுகளை இளைஞர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தற்போது பாஜகவினர் நடத்தி வருகிறோம் - பாஜக அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராஜரத்தினம் பேட்டி
திண்டுக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தில் காங்கிரஸ் அவசர கால பிரகடன கருப்பு தின செய்தியாளர் சந்திப்பு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராஜரத்தினம் கலந்து கொண்டு செய்தியாளிடம் பேசுகையில், திண்டுக்கல்லில் இந்திய நாட்டில் சுதந்திரம் பெற்ற பின்பு கொடுமையான ஆட்சி என்றால் இந்திரா காந்தியின் அவசர கால பிரகடனம். ஐக்கிய நாடுகள் ஜனநாயகம் மிக்க இந்திய நாட்டில் இப்படி ஆட்சியா என வியந்தார்கள். இந்திரா காந்தியின் கொடுங்கோல் ஆட்சி அவசர கால பிரகடனம் அறிவித்த பின்பு பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். எதிர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கேட்பாரின்றி அனைவரும் கைது செய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் ஆண்கள் அனைவரும் கருத்தடை செய்யப்பட்டு அதில் பலர் உயிரிழந்த சம்பவம் நடந்தது. இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியை அவர்கள் அனைவரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டனர். 21 மாதங்கள் கொடுமையான மாதங்களாக இந்தியா அனுபவித்திருக்கின்றது. அப்படிப்பட்ட அரசியல் கட்சி அந்த குணத்தை மாற்றவில்லை. இந்தியா என்றால் இந்திரா என கேட்க வேண்டும் என்ற ஆணவத்தோடு ஆட்சி ஆண்டனர். இந்தியாவின் உயிர்களுக்கு மதிப்பு கொடுக்காத ஒரு பேரியக்கமாக இருந்து வந்துள்ளது. அந்த கருப்பு தினத்தை மக்களுக்கு நினைவூட்டுகிறோம். அதேபோல் இந்திரா காந்தி சீக்கியர்களால் மிகப் பிரச்சினையால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் பேரிக்கியமானது ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்று குவித்தது. அதேபோல் இலங்கை பிரச்சனையில் இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் பொழுது காங்கிரஸ் தலைமையில் இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தான் நினைத்ததை நடத்த வேண்டும் என்ற சர்வாதிகார இயக்கம் தான் காங்கிரஸ். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அகற்றப்பட வேண்டிய கட்சி காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் அல்லாத இந்தியா தான் பாஜகவின் நோக்கம். காஷ்மீர் கூட இன்று நமக்கு பிரச்சனை இருப்பதற்கு காரணம் நேரு தான். பாஜக ஆட்சிக்கு பின் தான் காஷ்மீரை பாதுகாக்க போராடி வருகின்றோம். அப்படி இன படுகொலைக்கான காரணமான காங்கிரஸ் உடன் சேர்ந்துதான் திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்கள். இதனை தமிழ்நாட்டு இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கருத்தரங்குகள், காட்சி படங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன என பேசினார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாவட்ட பொருளாளர் கருப்புசாமி மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் ஆனந்தி மாவட்டச் செயலாளர் கருப்புசாமி, தமிழ்வாணன் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story