புகையிலை விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் கைது

X

புகையிலை விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் கைது
புகையிலை விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் கைது கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா தரகம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (66). இவர் தரங்கம்பட்டியில் உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் புகையிலை விற்ற மாணிக்கம் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story