குப்பைகளை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்

குப்பைகளை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம்
திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் சேகரமாகும் குப்பைகளை அகற்றுவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் ஒரு மாத காலமாக குப்பை அகற்றப்படாததால் நகர்மன்ற கூட்டத்திற்கு நேரில் வந்து புகார் அளித்த காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி தலைவர் உதய மலர் பாண்டியன் உறுதியளித்தும் ஒருவரும் வராததால் காவல் நிலையம் வளாகத்தில் குப்பைகளை சேகரித்து காவல்துறையினரே தீவைத்து எரித்தனர் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள திருவள்ளுவர் மன்ற கூடத்தில் நகர மன்ற கூட்டம் நடந்தது. நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பொறியாளர் , சுகாதார அலுவலர் , நகர் மன்ற உறுப்பினர்கள் வே.வசந்தி வேலாயுதம், , ரா.அம்பிகா ராஜசேகர், நகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.இதில் . வடக்கு ராஜ வீதியில் செயல்பட்டு வந்த நகராட்சி தொடக்கப்பள்ளி தவிர்க்க முடியாத காரணத்தால் தனியார் மண்டபத்தில் செயல்பட்டு வருவதால் உடனடியாக புதிய பள்ளிக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் கூட்டத்தில் கவுன்சிலர் வி.இ.ஜான் பேசும்போது, பூண்டி காப்புக் காட்டுக்குள் இருக்கும் குரங்குகள் தற்போது நகருக்குள் புகுந்து, வீடுகளில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. எனவே, குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் உறுதியளித்தார். திருவள்ளூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்மானது நகராட்சி தலைவர் உதய மலர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு பள்ளி கட்டிடத்தை விரைந்து முடிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர் 27 வார்டுகளை கொண்ட திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்றுதல் சாலை வசதிகளை மேம்படுத்துதல் குப்பைகளை முறையாக கையாளுதல் ஆகிய பணிகளை முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும் என கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர் மேலும் 110 கோடி ரூபாய் செலவில் தார் சாலை அமைத்து வேடங்கி நல்லூர் கிராமத்தில் அமைக்கப்படும் புதிய பேருந்து நிலையத்துடன் திருவள்ளூர் நகர்ப்புற பகுதியை இணைப்பதற்கு தார் சாலைக்கு மாற்றாக கூடுதலாக 40 கோடி ரூபாய் ஒதுக்கி 150 கோடி ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதலை மன்றத்தில் முன்வைத்தனர் இந்த கூட்டத்தில் திருவள்ளூர் நகராட்சி துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ,திருவள்ளூர் நகராட்சி ஆணையர் , நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஜான், வசந்தி வேலாயுதம், உள்ளிடடோர் பங்கேற்றனர் நகர மன்ற கூட்டத்திற்கு வந்திருந்த திருவள்ளுவர் நகர காவல் உதவி ஆய்வாளர் அகஸ்டின் ராஜ் காவல் நிலையத்தில் ஒரு மாத காலமாக குப்பைகளை அகற்றாமல் தேங்கி கிடப்பதாகவும் முடிவு முறையில் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நகர்மன்ற தலைவர் காவல் உதவி ஆய்வாளரிடம் தெரிவித்தார் இருப்பினும் நகராட்சியில் இருந்து ஒருவரும் வராததால் காவல்துறையினரே காவல் நிலைய வளாகத்தில் குப்பைகளை ஒன்றாக சேர்த்து தீ வைத்துக் கொளுத்தினர் இப்படி குப்பைகளை அகற்றுவதில் பாரபட்சம் பார்த்து நகர காவல் துறையினரை கதற வைத்த திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் 27 வார்டுகளிலும் குப்பைகளை கையாளுவதில் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story