கரூர்-உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நாளை நடைபெறும்.எம்எல்ஏ மாணிக்கம் பேட்டி.

கரூர்-உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நாளை நடைபெறும்.எம்எல்ஏ மாணிக்கம் பேட்டி.
கரூர்-உறுப்பினர் சேர்க்கை விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நாளை நடைபெறும்.எம்எல்ஏ மாணிக்கம் பேட்டி. திமுக கட்சி அலுவலகமான அலுவலகத்தில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது ஓரினியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார். இந்த திட்டம் உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்லாது,தமிழக மக்களின் மண், மொழி,மானம் காப்பதற்காக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைப்பது தான் நோக்கமாகும் என்று தெரிவித்த அவர்,ஒன்றிய அரசு தமிழக மக்கள் மீது பாசிசத்தை திணித்து வருகிறது. நீட் தேர்வினால் தமிழக மருத்துவ மாணவர்களின் படிப்பு வீணாகி வருகிறது.தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தராமல் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது. இதனை பொதுமக்களிடம் விளக்கி தெரிவிக்க நாளை ஜூலை 2-ம் தேதி கரூர் உழவர் சந்தை அருகே விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். பேட்டியின் போது அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story