தளவாய் பாளையம்-டூவீலர்கள் மோதல்.கணவன் கண் முன்னே மனைவி உயிர் இழப்பு.

தளவாய் பாளையம்-டூவீலர்கள் மோதல்.கணவன் கண் முன்னே மனைவி உயிர் இழப்பு.
தளவாய் பாளையம்-டூவீலர்கள் மோதல்.கணவன் கண் முன்னே மனைவி உயிர் இழப்பு. நாமக்கல் மாவட்டம் , பரமத்தி வேலூர் , சின்னா நகரை சேர்ந்தவர் குப்புசாமி வயது 64 .இவரது மனைவி தமிழரசி வயது 54. இவர்கள் இருவரும் சேலம்- கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் ஜூன் 29ம் தேதி இரவு 9 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் கரூரை அடுத்த தளவாய் பாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரி பிரிவு சாலை அருகே வந்தபோது , பின்னால் வந்த அடையாளம் தெரியாத மற்றொரு டூவீலர் குப்புசாமி டூவீலரின் பின்னால் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் தமிழரசிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் அறிந்த குப்புசாமியின் மகன் சசிகுமார் வயது 32 என்பவர் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர் உயிரிழந்த தமிழரசியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story