காமராஜ் மார்க்கெட் அருகே கார் மீது டூவீலர் மோதி விபத்து .ஒருவர் படுகாயம்.

காமராஜ் மார்க்கெட் அருகே கார் மீது டூவீலர் மோதி விபத்து .ஒருவர் படுகாயம்.
காமராஜ் மார்க்கெட் அருகே கார் மீது டூவீலர் மோதி விபத்து .ஒருவர் படுகாயம். திருப்பூர் மாவட்டம், கான்வென்ட் கார்டன் , வள்ளியம்மாள் நகரை சேர்ந்தவர் முருகன் வயது 31. இவர் ஜூன் 27ம் தேதி இரவு 11 மணி அளவில் , கரூர் சர்ச் கார்னரில் இருந்து 5 ரோடு செல்லும் சாலையில் அவரது காரில் சென்றார். அப்போது கரூர் கார் தெருவை சேர்ந்த லோகேஷ் வயது 28 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற டூ வீலர் , முருகன் காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலர் உடன் கீழே விழுந்த லோகேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது . இச்ச சம்பவம் தொடர்பாக முருகன் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நேற்று இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story