பொதுமக்கள் காவல்நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு

பொதுமக்கள் காவல்நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு
X
திண்டுக்கல் பேகம்பூர் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெற்கு காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு
திண்டுக்கல் மாநகராட்சி 26 வது வார்டு மாமன்ற உறுப்பினராக மக்கான் தெருவை சேர்ந்த ராஜா முகமது என்பவரின் மகன் முகமது இலியாஸ் வயது 34 என்பவர் உள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இளைஞர் அணி தேசிய செயலாளராக உள்ளார். இந்நிலையில் ஜூன் 27 ஆம் தேதி பேகம்பூர் சுற்றியுள்ள பள்ளிவாசல்களில் நாட்டாண்மை காஜா மைதீன் என்பவரின் தூண்டுதலின் பேரில் முகமது யூசுப் மற்றும் காஜா நஜ்முதீன் என்பவர்கள் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான விஷயங்களையும், பொது மக்களையும் தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்று தனது பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் நோட்டீஸ் வினியோகம் செய்து மேலும் தன்னை அசிங்கப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாகவும், அது மட்டுமல்லாது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்து நான்கு நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என இன்று பேகம்பூர், முகமதியாபுரம், மக்கான் தெரு, பூச்சி நாயக்கன்பட்டி, ஜின்னா நகர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முன்னாள் பெரிய பள்ளிவாசல் பொறுப்புதாரிகள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தெற்கு காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன் மற்றும் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசி வருகின்றனர். நோட்டீஸ் விநியோகம் செய்தது சம்பந்தமாக நாட்டாண்மை காஜா மைதீன் மற்றும் அவருக்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது பேகம்பூர் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் சார்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வருடத்திற்கு இரண்டு முறையாவது நோட்டீஸ் மூலம் பேகம்பூர் சுற்றியுள்ள பொது மக்களிடம் வன்முறையை தூண்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
Next Story