கிராமப்புற பரதநாட்டிய கலை மாணவர்களின் சலங்கை ஏற்பு விழா

X

வத்தலக்குண்டு ஸ்ரீ சிவா கலாலயம் சார்பில் கிராமப்புற பரதநாட்டிய கலை மாணவர்களின் சலங்கை ஏற்பு விழா நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஸ்ரீ சிவா கலாலயம் சார்பில் கிராமப்புற மாணவர்கள் பரதநாட்டிய கலையில் சலங்கை ஏற்பு விழா நடைபெற்றது. திருமுறை நடன ஆசிரியர் முத்துக்குமரன் ஏற்பாட்டில் ஆண் பெண் என பத்துக்கும் மேற்பட்ட பரத கலை மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர் ஜதி தாளத்திற்கு ஏற்றவாறு அபிநயம் பிடித்தும், முக பாவனைகளை காட்டியும் ஒவ்வொரு பரதக் கலை மாணவர்களும் தங்கள் தனித் திறனை வெளிப்படுத்தி அசத்தினர் இந்நிகழ்வில் நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் ஈடன் கார்டன் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பங்கேற்று பரத கலை மாணவர்களுக்கு பரிசுகள் அளித்து பாராட்டினர் இந்நிகழ்வினை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பரதநாட்டிய ரசிகர்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
Next Story