காங்கேயம் அருகே வலி நிவாரணி மாத்திரையை போதைக்கு பயன்படுத்தும் இளைஞர்கள்- இன்ஸ்டாகிராமில் நெட் ஒர்க்காக செயல்பட்டு மாத்திரை விநியோகிப்பதாக தகவல்

X

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பெருமாள் மலை பகுதியில் 2 இளைஞர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வலி நிவாரணி மாத்திரையை போதைக்கு பயன்படுத்துவதாக அங்கிருந்த பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைப்பு. இளைஞர்கள் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை
காங்கேயம் சிவன்மலை அடுத்து உள்ளது பெருமாள்மலை இங்கு தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபத்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் இரண்டு இளைஞர்கள் நீண்ட நேரமாக இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து அருகில் சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அந்த இளைஞர்கள் ஒரு வகை மாத்திரையை பொடிப்பொடியாக நுணுக்கி பிளேஸ்ட்டிக் டம்ளரில் தண்ணீருடன் கலந்து அதை ஊசி மூலம் கையை கயிற்றில் இறுக்கமாக கட்டி உடலில் நரம்பு பகுதியில் செலுத்தி கொண்டு இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அந்த இளைஞர்களை விசாரித்த போது காங்கேயம் பெருமாள்கோவில் வீதியை சேர்ந்த கவின்குமார் (29) சிவன்மலை சரவணா நகரை சேர்ந்த சூர்யாபிரகஷ் (21) என்பதும் தெரியவந்தது. புற்றுநோய் போன்ற கொடிய நோயிகளினால் பாதிக்கப்படும் நோயாளிகள் வழியில் இருந்து தற்காத்துக் கொள்ள பயன்படுத்தும் (TAPENTADOL TABLETS) டபெண்டடொள் மாத்திரைகளை பொடியாக்கி அதை டம்ளர் மூலம் தண்ணீர் அல்லது (STERILE WATER) மலட்டு நீரில் கலந்து ஊசி மூலமாக மாத்திரை கலந்த நீரை ஏற்றி அவரவர் கைகளை கயிறு முலமாக இறுக்கமாக கட்டிக்கொண்டு உடலின் நரம்பு பகுதியில் செலுத்தி கொள்கின்றனர். அவ்வாறு செய்யும் பொழுது போதை அதிகமா கிடைக்கும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அந்த இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மாத்திரைகள் மருத்துவரின் அறிவுறுத்தப்பட்டு மருந்து சீட்டு இல்லாமல் இந்த வகை மாத்திரைகள் மருந்து கடைகளில் வழங்கப்படமாட்டாது என்பது கூடுதல் தகவல். இரண்டு இளைஞர்களின் குடும்பத்தினரிடம் விசாரிக்கையில் இந்த மாத்திரைகளை இன்ஸ்டாகிராம் மூலமாக நெட் ஒர்க் வைத்துக்கொண்டு (CODE WORD ) குறியீட்டு வார்த்தை பயன்படுத்தி அதிக விலை கொடுத்து ஈரோடு பகுதியில் இருந்து வாங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வகை போதை பழக்கத்தில் இது போல் எத்தனை இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் அவர்களின் நெட் ஒர்க் என்று கூறப்படும் சங்கிலித் தொடரில் யார் யார் எல்லாம் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த மாத்திரையை வழங்குபவர் யார் என பல்வேறு கோணத்தில் காவல்துறை பல்வேறு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story