இந்திரா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து

X

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு இந்திரா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து
தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, தாராபுரத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பள்ளி ஆசிரியர்களுடன் இணைந்து தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மருத்துவர்களை நேரில் சந்தித்து, மருத்துவ தின வாழ்த்துகளை தெரிவித்தனர். அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் உமா மகேஸ்வரி மாணவர்களுடன் உரையாடினார். மாணவர்கள் மருத்துவத்துறையின் முக்கியத்துவம், மருத்துவப்படிப்பில் உள்ள வாய்ப்புகள், மருத்துவச் சேவையின் சவால்கள் போன்ற பல விஷயங்களை கேட்டு அறிந்தனர். மருத்துவர்களும் மாணவர்களுக்கு மருத்துவ அறிவைப் பகிர்ந்து, எதிர்கால மருத்துவர்களாக உருவெடுக்க வேண்டிய ஆற்றலும் சேவை மனப்பான்மையும் குறித்து அறிவுரைகள் வழங்கினர்.மேலும், பள்ளியின் சார்பாக மருத்துவர்களுக்கு நினைவு பரிசுகள், செடிகள் வழங்கி மருத்துவ தின வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் அமலி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story