முத்து மாரியம்மன் கோவிலில் கொடை விழா : முளைப்பாரி மாவிளக்கு ஊர்வலம்

X

முத்து மாரியம்மன் கோவிலில் கொடை விழா : முளைப்பாரி மாவிளக்கு ஊர்வலம்
தூத்துக்குடி மேல சண்முகபுரம் முத்து மாரியம்மன் கோவில் கொடை விழாவில் முளைப்பாரி, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது தூத்துக்குடி மேல சண்முகபுரம் வண்ணார் 3ம் தெரு தொடர்ச்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 22ஆம் தேதி கணபதி ஹோமம் கும்ப பூஜையுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அலங்கார தீபாரணை நடந்தது. 2வது நாள் விழாவில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை அக்னி சட்டி பால்குடம் ஊர்வலம் நடந்தது. பின்னர் மதியம் அம்மனுக்கு சிறப்பு தீபாரணை, பின்னர மகா அன்னதானம் நடந்தது. மாலையில் அம்மன் ஊர் சுற்றி வரும் நிகழ்ச்சி நடந்தது இரவு 9 மணிக்கு 101 முளைப்பாரி மற்றும் 508 மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பின்னர் இரவு சாம கொடை விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா கோட்டுராஜா, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, சண்முகபுரம் வட்ட பிரதிநிதி சண்முகராஜ், கோவில் பொதுச் செயலாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர்கள் பிரபு, செயலாளர் பிஎஸ் பொன்ராஜ், துணை செயலாளர் முருகேசன் பொருளாளர் பழனிக்குமார் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story