பிஜேபி அரசு மீது அமைச்சர் அனிதா கடுமையான குற்றச்சாட்டு

X

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் மக்கள் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் திட்டங்களை தீட்டி வருகிறார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் மக்கள் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் திட்டங்களை தீட்டி வருகிறார் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மண் மொழி மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் அப்போது பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் மகளிர் காண திட்டம் மாணவர்கள் காண திட்டம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் வாழ்க்கை உயர்வதற்கு மட்டுமல்ல அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ஆனால் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக அரசு தமிழகத்தின் உரிமைகளை காவு வாங்கும் வகையில் முடக்க நினைக்கிறது அதற்கு ஒரு போதும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விடமாட்டார் ஜிஎஸ்டி பேர கூடிய வரியை குறைவான வரியை திருப்பித் தருகிறார்கள் அதுபோல் கல்விக்கான நிதியையும் தர மறுத்து வருகிறார்கள் ஆனாலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் மக்கள் மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் திட்டங்களை தீட்டி வருகிறார் என தெரிவித்தார் இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பில்லா ஜெகன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்
Next Story