சாலையின் நடுவே மின் கம்பம் - சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரல்

X

காங்கேயம் ஒன்னாவது வார்டு திருவிக நகரில் சாலையின் நடுவே மின் கம்பம் - சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சி 1வது வார்டு பகுதியான திருவிக நகர் பகுதியில் நேற்று புதிதாக தார் சாலை போடப்பட்டது. அப்போது திருவிக நகரில் இருந்து ஏ.சி.நகர் செல்லும் சாலையில் பிஏபி புதிய பாலம் அருகே உள்ள ஒரு வீதியில் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்தது.இதை அப்புறப்படுத்தி சாலையை புதிப்பித்து தருமாறு இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்த மின்வாரியத்திற்கு மற்றும் நகராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை முன்வைத்தனர். ஆனால் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் புதிய சாலை போடா டெண்டர் விடப்பட்டு நேற்று இப்பகுதியில் சாலை போடும் பணியும் முடிவடைந்து விட்டது. மின்வாரியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்காவது கம்பத்தை அப்புறப்படுத்தி பின்னர் தார் சாலை அமைக்க வேண்டும் என நினைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் இந்த சாலை போடும் டெண்டர் எடுத்த நிறுவனத்திற்க்காவது சாலையை இப்படியே போட்டால் பொதுமக்கள் பயன்படுத்துவது சிரமம் ஏற்படும் என யோசித்திருக்க வேண்டும். இந்த சாலையில் தற்போது இருசக்கர வாகனம் மட்டுமே பயணிக்கும் விதத்தில் புதியதோர் சாலை பணியை காங்கேயம் நகராட்சி நிறுவி உள்ளதை காங்கேயம் பகுதி பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர். மேலும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியானது தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரின் சொந்த தொகுதியாகும். மேலும் இந்த 1 வது வார்டு பகுதியானது திமுகவில் கவுன்சிலராக வெற்றி பெற்று தற்போது நகராட்சி தலைவராக உள்ள சூர்யா பிரகாஷ் சொந்த வார்டு ஆகும் என்பது கூடுதல் தகவல். மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story