தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி  ஆர்ப்பாட்டம்
X
தூத்துக்குடியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பொது மாறுதல் கலந்தாய்வு அறிவித்துவிட்டு நிர்வாக மாறுதல் ஆணைகள் வழங்கி வரும் தொடக்கக் கல்வித் துறையை கண்டித்து தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆண்டனி சார்லஸ், ஆனந்தி, மாவட்டச் செயலாளர் கலை உடையார், பொதுச் செயலாளர் மயில், மாவட்ட பொருளாளர் ஜெயசீலி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில்,தொடக்கக்கல்வித்துறையில் கண்துடைப்பாக 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை அறிவித்துவிட்டு மாநிலம் முழுவதும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் விதிகளுக்குப் புறம்பாக, சட்டவிரோதமாக மாறுதல் ஆணைகளை நாள்தோறும் வழங்கி வரும் தொடக்கக்கல்வித் துறையை கண்டித்தும்! மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும்! மாநிலம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறையில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளின்மீது விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தொடக்கக்கல்வித்துறையில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வுக் கலந்தாய்வு அறிவிக்கப்படாததால் உபரி ஆசிரியர்கள், மலைச்சுழற்சி ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படவுள்ள கடும் பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் கல்வி நலன் கருதி ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து பதவி உயர்வுடன் கூடிய ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்திடு! அதுவரை தொடக்கக் கல்வித்துறையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள 2025-2026 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை நிறுத்திட வேண்டும்! 2025-2026 ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வித்துறையில் பணிஓய்வு பெறும் இடை நிலை ஆசிரியர்களுக்கு விதிகளின்படி பணி நீட்டிப்பு வழங்கிடு வேண்டும்! உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story