தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கத்தின் 23 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2-ம் நாள் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம்
தாராபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாராபுரம் வட்டக்கிளை சார்பாக நடைபெற்றது. வட்டக்கிளை இணை செயலாளர் சிவராசு தலைமை தாங்கினார். செயலாளர் தில்லையப்பன் விளக்க உரையாற்றினர். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிமொழி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கத்தின் 23 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2-ம் நாள் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் கிண்டியில் உள்ள தொழில் பயிற்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story