தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பொதுக் குழு கூட்டம்

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பொதுக் குழு கூட்டம்
X
காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம்
காங்கேயம் -சென்னிமலை சாலை தில்லைவனத்தில் அமைந்துள்ள காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்க அரங்கத்தில் ஆண்டு பொதுக்குழு கூட் டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் பி.கே.பி. சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜீ.எஸ்.கவுரிசங்கர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கவுரவ ஆலோசகர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என். நடராஜ், முன்னாள் செயலாளர் எஸ்.எம். பாலசுப்பிரமணியம் மற்றும் முன்னாள் பொருளாளர் சி.தெய்வசிகாமணி மற்றும் காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சங்க உறுப்பினர்களிடம் தொழிலிலுள்ள பிரச்சினைகள் பற்றி கலந்து ஆலோசித்து தொழில் முன்னேற்றத்திற்காக பல ஆலோசனைகளும், தேங்காய் உடைக்கும் தொழிலாளர்களுக்கான உடைப்பு சம்பளம் நிர்ணயம், தேங்காய் இறக்க ஒரு டன்னுக்கு ரூ.50 என்று நிர்ணயம் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ஏ.டி.சி.பழனிச்சாமி வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்து நன்றி கூறினார்.
Next Story