துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் திறப்பு விழா

துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் திறப்பு விழா
X
தாராபுரம் அருகே துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் திறப்பு விழா. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்
தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தாபுரம் ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி தலைமை தாங்கி துணை வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார். தலா 25 விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், பழக்கன்றுகள், பயிறு வகை தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டது. சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 4 லட்சம் ரூபாய்க்கான பணி ஆணை 4 நபர்களுக்கும், ரூ.1.20 லட் சம் மதிப்பில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கு பணி ஆணை ஒருவருக்கும் வழங்கப்பட்டது. இதில் வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், அமராவதி பாசன சங்க தலைவர் பார்த்தசாரதி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சசிகுமார், வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரவடிவேல், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சசிகலா, வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன், தோட்டக்கலை உதவி இயக்குனர் சசிகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story