சிவன்மலையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - போலீசார் வி

சிவன்மலையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - போலீசார் வி
X
சிவன்மலையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை - போலீசார் விசாரணை 
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை சரவணா நகர் பகுதியில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 1/2 பவுன் தங்க தோடு மற்றும் ரொக்கம் ரூ.57 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயம் அருகே சிவன்மலை, சரவணா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் (53), ஜெயலட்சுமி (43) தம்பதியினர். இதில் செல்வராஜ் சிவன்மலையில் உள்ள படியூர் சர்வோதய சங்கத்திலும், ஜெயலட்சுமி படியூர் சர்வோதய சங்கத்திலும் வேலை செய்து வருகின்றனர், இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். செல்வராஜின் தாய் சொர்ணாத்தாள் (70) நூறு  நாள் வேலைக்கு சென்று விட்டார். பின்னர், வேலை முடிந்து மாலை 6 மணியளவில் சொர்ணாத்தாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.57 ஆயிரம் மற்றும் அரை பவுன்  தங்க தோடு ஆகியன கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.  இது குறித்த தகவலறிந்து வந்த காங்கேயம் போலீசார், சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பணத்தை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட  மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சிவன்மலை சரவணா நாகர் பகுதி எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதி ஆகும். இப்பகுதியிலே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே பகுதியில் கடந்த மாதம் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை ஒரு இளைஞன் திருடிச்செல்லும் வீடியோ காட்சி வைத்து புகார் தெரிவித்தும் காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை, வாகனத்தை திருடிய நபர் யார் என கண்டுபிடிக்கவில்லை என வாகனத்தின் உரிமையாளர் பூபதி மிகுந்த வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றார்.
Next Story