பல்லடத்தில் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

X

பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி வாரியாக, ஆயிரம் வாக்காளர்களில் குறைந்த பட்சம், 300 பேர் தி.மு.க., வில் புதிய உறுப்பினராக இணைக்க வேண்டும் என்று தி.மு.க. நிர்வாகிகளுக்கு தி.மு.க தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பல்லடம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் ஓரணியில் உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சியை ஒன்றிய செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அவைத் தலைவர் சாமிநாதன், மாவட்ட பிரதிநிதி அன்பரசன், துரைமுருகன், இளைஞர் அணி ராஜேஸ்வரன், கதிர், மற்றும் முனியன், வடிவேல் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story