சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாசார கலைவிழா

சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாசார கலைவிழா
X
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான 3-வது கலாசார கலைவிழா ரிதம்-25 என்ற பெயரில் சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரியின் அன்னபூர்ணா அரங்கத்தில் நடந்தது. விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பி.கே.சுதிர் தலைமை தாங்கினார். பதிவாளர் ஏ.நாகப்பன், மாணவர் நல இயக்குனர் சண்முகசுந்தரம், ஐ.ஐ.சி. இயக்குனர் ஞானசேகர், ஒருங்கிணைப்பு குழு தலைவி தீப்தி சாஸ்திரி, ஒருங்கிணைப்பாளர் சிவரஞ்சனி உள்பட பலர் கலந்து கொண்டனர். ரிதம்-25 நிகழ்ச்சியில் சென்னை, சேலம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 வளாகத்தில் உள்ள 23 அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். 23 நேரடி மற்றும் 5 ஆன்லைன் நிகழ்வுகள் நடந்தன. இசை, நடனம், நாடகம், இலக்கியம் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். கலை போட்டியில் சேலம் சங்கராசாரியார் பல் மருத்துவ கல்லூரி வெற்றிக்கோப்ைபயை பெற்றது. விநாயகா மிஷன்ஸ் ஓமியோபதி மருத்துவ கல்லூரி 2-வது இடம் பிடித்தது. தனிநபர் சாம்பியன் பட்டத்தை ஓமியோபதி மருத்துவ கல்லூரி மாணவர் ஆகாஷ் பெற்றார். அறுபடை வீடு மருத்துவ கல்லூரி மாணவர் சக்‌ஷம் மேத்தா, ‘மிஸ்டர் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம்’ பட்டத்தை பெற்றார். பிசியோதெரபி கல்லூரி மாணவி தேவ்வர்ஷா, ‘மிஸ் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகம்’ பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story