சேலம் கோ-ஆப்டெக்சில் பழசுக்கு புதிய பட்டு சேலை விற்பனை

சேலம் கோ-ஆப்டெக்சில் பழசுக்கு புதிய பட்டு சேலை விற்பனை
X
மண்டல மேலாளர் தகவல்
சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் பழசுக்கு புதிய பட்டு சேலை விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய வெள்ளி ஜரிகை பட்டு சேலைகளை மதிப்பீடு செய்து, அதற்கு பதில் புதிய பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பட்டு சேலைகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடியுடன் விற்பனை நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட காஞ்சீபுரம், ஆரணி, சேலம், திருபுவனம், கோவை மென்பட்டு சேலைகள் மற்றும் கோடை காலத்திற்கு ஏற்ற பருத்தி சேலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை மண்டல மேலாளர் மா.பாலசுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
Next Story