சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
X
போலீசார் விசாரணை
சேலம் கோட்டை குண்டுபோடும் தெரு ராம்நகரை சேர்ந்தவர் சுபாஷினி (வயது 33). இவர் நேற்று முன்தினம் வீட்டின் கதவை பூட்டிவிட்டு சாவியை மின்மீட்டர் பாக்சில் வைத்துவிட்டு அப்பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3½ பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சுபாஷினி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story