ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்

X

தேங்காய் பருப்பு ரூ.17 லட்சத்திற்கு ஏலம்
ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவில் இந்திராநகர் பகுதியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விற்பனைக்காக தேங்காய் பருப்பு 171 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. 30 விவசாயிகள் கொண்டு வந்து இருந்த தேங்காய் பருப்பை வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். இதில் அதிகபட்ச விலையாக 246.50 ரூபாயும், குறைந்தபட்ச விலையாக 170.91 ரூபாயும், சராசரி விலையாக 241 ரூபாயும் விலை போனது. நேற்று தேங்காய் பருப்பு மொத்தம் 17 லட்சத்து 15 ஆயிரத்து 195 ரூபாய்க்கு விற்பனையானது என ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர் ஆனந்தி தெரிவித்தார்.
Next Story