இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்பாட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்பாட்டம்
X
நாகர்கோவில்
குமரிமாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகரகிளையின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகர எல்லைக்குள் வசூலிக்கபடும் வாகன கட்டணத்தை திரும்பபெற வேண்டும், மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் நடக்கும் நடைபாதைகளை சீரமைக்க வேண்டும், ஆண்டாண்டு காலமாக சுகாதார சீர்கேட்டை மாநகராட்சிக்குள் ஏற்படுத்திவரும் வலம்புரி உரகிடங்கு மலைமேட்டை உடனே சீரமைக்க வேண்டும், மழைகாலங்களில் சாக்கடை நிறைந்து மழைநீர் சாலையில் ஆறாக ஓடி சாலைகளை சேதப்படுத்துவதை உடனே தடுத்திட வேண்டும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஏழைகளுக்கு இலவச ஸ்கேன் வசதி பல தடைபட்டுள்ளது. இதனை உடனே சீர்செய்து நடைமுறை படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர செயலாளர் கே. நாகராஜன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர பொருளாளர் சி. நாகப்பன் முன்னிலை வகித்தார் கோரிக்கைகளை விளக்கி குமரிமாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தா. சுபாஷ் சந்திர போஸ், மாவட்ட துணைச்செயலாளர் ஜி. சுரேஷ் மேசிய தாஸ் ஆகியோர் பேசினர்.
Next Story