மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ்

X

குளச்சல்
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அக்கட்சியின் மாநில தலைவர், சகோதரர் தடா ரஹீம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி நிகழ்வை ஒருங்கிணைத்த இந்திய தேசிய லீக் கட்சியினருக்கு நன்றி தெரிவித்து பரிசு பெற்ற மாணாக்கருக்கு பாராட்டு தெரிவித்தார்.
Next Story