மீனவர் பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

X

குளச்சல்
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாகர் மித்ரா என்ற ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கு குமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுகாவை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி தகுதி மீன்வள அறிவியல், கடல் உயிரியல் மற்றும் விலங்கியல் இளங்கலை படிப்பு. தகவல் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். வயது 35க்கும் மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 15ஆம் தேதி. மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீன் வளநலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், குளச்சல் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Next Story