போதையில் இளம் பெண்கள் ரகளை

X

கடையாலுமூடு
குமரி மாவட்டம் கடையாலுமூடு போலீஸ் எல்லைக்குட்பட்ட நெட்டா, அரகநாடு பகுதியில் அணை உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளதால் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 3 பைக்கில் 3 வாலிபர்கள் மூன்று இளம் பெண்கள் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் மது போதையில் தகராறு செய்தனர். உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்றது. வாலிபர்கள் இளம்பெண்கள் பைக்கில் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டனர். இரண்டு வாலிபர்கள் ஒரு இளம் பெண்ணை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து மூன்று பேரையும் போலீஸ் நிலையத்தில் அழைத்து விசாரித்தனர். பின்னர் மூன்று பேரையும் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story