பகுதி நேர நியாய விலை கடை அமைப்பதற்கு ஆய்வு

X

பகுதிநேர நியாய விலை கடை
திருநெல்வேலி மாவட்டம் சமுகரெங்கபுரம் ஊராட்சி கட்டனேரி கிராம மக்கள் நீண்ட நாட்களாக ரேஷன் கடை அமைக்க கோரிக்கை வைத்திருந்தனர்.இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ் ஆகியோரின் முயற்சியால் பகுதி நேர நியாய விலை கடை அமைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ராதாபுரம் வட்ட வழங்கல் அலுவலர் இராமலெட்சுமி இன்று கட்டிடத்திற்கான கள ஆய்வை மேற்கொண்டார்.
Next Story