மயங்கி விழுந்து கூலித்தொழிலாளி மரணம்

X

களக்காடு காவல் நிலையம்
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் தச்சன்குளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (50) நேற்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து களக்காடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story