ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

X

ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பாலவநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ், காலை உணவு தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், இலுப்பையூர் துணை சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, சிகிச்சை பெற வந்த தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடம் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அணுகுமுறைகள், சேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தமிழ்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு, தரம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் சேவைகள் முறையாக மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
Next Story