பருத்திக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நேரடி விற்பனை செய்யலாம்

பருத்திக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நேரடி விற்பனை செய்யலாம்
X
பருத்திக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நேரடி விற்பனை செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,., அவர்கள் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில், 14,028 ஹெக்டேர் பரப்பிளவில் பருத்தி ராபி மற்றும் கோடை பருவத்தில் பயிர் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.78 மெ.டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. BT பருத்தி, SURAJ , SURABI , SVPR-2, SVPR-4 மற்றும் RCH போன்ற ரகங்கள் அதிகளவில் விருதுநகர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளன. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக (e-NAM), மறைமுக ஏலமுறையில் பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை நடைபெறுகிறது. பருத்திக்கு நியாயமான விலைபெறுவதற்கு, நன்கு காய்ந்த பஞ்சுகளை அறுவடை செய்து, உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வந்து (e-NAM), திட்டத்தில் பங்கு பெற்று நல்ல போட்டி விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினர் பருத்தியின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம், இழை நீளம், இழையின் நுண்மைத்தன்மை, முதிர்ச்சி மற்றும் நீண்ட இழை தரக்கூடிய பருத்தி இரகங்கள் குறித்து முகாம் நடத்தி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தேசிய பருத்தி வாரியத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்வதற்கு நியாயமான சராசரி தரக்காரணிகளான (FAQ) ஈரப்பதம் 8 சதவிதத்திற்கு மிகாமலும் பருத்தி இழையானது 29.0 மில்லிக்கு கூடுதலாகவும் பழுப்பு மற்றும் சருகு இல்லாத பருத்தியை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் Cotton Corporation of India நிறுவனம் மூலம் கொள்முதல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் அலுவலர்கள் விவசாயிகளின் வயல்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, விவசாயிகளை வணிகர்களுடன் ஒருங்கிணைத்து, பருத்திக்கு இலாபகரமான விலை கிடைக்கச் செய்திட அறிவுறுத்தினார். விருதுநகர் மாவட்ட பருத்தி விவசாய பெருமக்கள் பயன்பெற விருதுநகர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 93600-87561 என்ற அலைபேசி எண்ணிலும், இராஜபாளையம் விறப்னைக்கூடகண்காணிப்பாளரை 82484-05989 என்ற அலைபேசி எண்ணிலும், சாத்தூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 90033-56172 என்ற அலைபேசி எண்ணிலும், அருப்புக்கோட்டை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 79045-37699 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டும் வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் செயலாளர், விருதுநகர் விற்பனைக்குழு அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Next Story