ஆம்பூரில் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறுவதாக பயம் ஏற்படுகிறது பாஜக மாநில செயலாளர் பேட்டி

ஆம்பூரில் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறுவதாக பயம் ஏற்படுகிறது பாஜக மாநில செயலாளர் பேட்டி
X
ஆம்பூரில் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறுவதாக பயம் ஏற்படுகிறது பாஜக மாநில செயலாளர் பேட்டி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறுவதாக பயம் ஏற்படுகிறது பாஜக மாநில செயலாளர் பேட்டி ஆம்பூரில் கைத்துப்பாக்கிகள் கைப்பற்ற விவகாரம், ஆம்பூர் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறுவதாக பயம் ஏற்படுகிறது, கைதுப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் நடைப்பெறும் விசாரணையில் மாவட்ட மற்றும் மாநில காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, என்.ஐ.ஏ. விசாரணை தேவை என ஆம்பூரில் பாஜக மாநில செயலாளர் பேட்டியிள் கூறினார் திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் கடந்த 6 ஆம் தேதி ஆம்பூரில் ஆசிப் என்பவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை தேடி அவரது வீட்டிற்கு சென்ற போது அவர் வீட்டில் கத்தி இருந்துள்ளது கத்தியை எடுத்த பின்னர் அவரது சகோதரி வீட்டில் துப்பாக்கியை எடுத்தோம் என காவல்துறையினர் கூறுகின்றனர், ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அவரது வீட்டில் துப்பாக்கி இருப்பதாக தகவல் கிடைத்து, காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர் ஆனால் சரியான தேடுதல் இல்லாததால் அந்த இளைஞர் துப்பாக்கியை வேலூரில் இருக்கும், தனது சகோதரி வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார் அதன்பின்னர் அங்கிருக்கும் காவல்துறையினர், தகவல் தெரிந்து அங்கிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர், அந்த துப்பாக்கிகள் ஜெர்மன் போன்ற வெளிநாட்டு துப்பாக்கிகள் அதன் மதிப்பு 10 லட்சத்திற்கு மேல் இருக்கும் நான்கு துப்பாக்கி என காவல்துறையினர் கூறுகின்றனர் அதன் கணக்கு சரியாக தெரியவில்லை ஆனால் இதுவரைக்கும் காவல் துறையினர் இது குறித்து எந்த விதமான பத்திரிக்கை செய்தியும் பத்திரிக்கையாளரையும் சந்திக்கவில்லை பத்து தோட்டாக்களையும் எடுத்துள்ளனர் மீதமுள்ள மூன்று துப்பாக்கிகளின் குண்டுகள் என்ன ஆயிற்று என தெரியவில்லை ஏழு கத்திகளையும் பறிமுதல் செய்துள்ளனர் அது இன்னும் அதிகம் எனக் கூறுகிறார்கள் லட்சக்கணக்கில் பணத்தையும் எடுத்து உள்ளார்கள் , ஆசிப் சாதாரண ஒரு நபர் அவரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுத்துள்ளனர் அவரிடம் பணம் மற்றும் துப்பாக்கி எப்படி வரும் அவர் தீவிரவாத நெட்வொர்க்கில் உள்ளார என்பது ஆச்சரியமாக உள்ளது ஏற்கனவே காஷ்மீரில் ஒரு தீவிரவாதியை பிடித்த பொழுது அவர் சொந்த ஊர் வேலூர் என கூறுகிறார்கள் ஆம்பூர் பகுதி தீவிரவாதிகளின் கூடாரமாக உருவாவதாக பயம் ஏற்படுகிறது, ஏற்கனவே வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கொலை செய்யப்பட்ட பொழுது தீவிரவாதிகள் தொடர்பு உள்ளதாக தெரிவித்தோம் காவல்துறையினரின் தவறான முன்னெடுப்பால் நாங்கள் பிஜேபி மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகளை பறிக்கொடுத்துள்ளோம், அதேபோன்று தற்பொழுது நான்கு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது இதற்கு பின்னர் யார் உள்ளனர் , தீவிரவாதியின் குழு உருவாவதாக சந்தேகம் உள்ளது கோவை குண்டு வெடிப்பு சம்பவம் போல் இந்த விவகாரத்தையும் காவல்துறையினர் மறைத்து விடுவதாக சந்தேகம் எழுகிறது இந்த விசாரணையை என்.ஐ.ஏ விசாரணை செய்ய கேட்டுக்கொள்கிறோம் என்.ஐ.ஏ விசாரித்தால் மட்டுமே உண்மை தன்மை தெரியும் துப்பாக்கி கலாச்சாரம் உருவாக ஆரம்பித்துள்ளது, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையை நாங்கள் நம்பிக்கை இல்லை மாநில காவல்துறையினர் இவர்களுக்கு சாதமாக உள்ளது என்.ஐ.ஏ விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் இது குறித்து மாநில தலைமைக்கு தகவல் அளித்த பின்னர் அவர்கள் என்ன முடிவு சொல்கிறார்களோ அடுத்த கட்ட நிகழ்வுகளை நாங்கள் முன்னெடுப்போம் என தெரிவித்தார்.இதில் பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்..
Next Story