தெரு நாய் கடித்து மூன்று ஆடுகள் இறப்பு

X

மதுரை சோழவந்தான் பகுதியில் தெரு நாய் கடித்து மூன்று ஆடுகள் இறந்தன.
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரம் தெரு நாய் கடித்ததில் 10 பேர் காயம் அடைந்து அதில் இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் முள்ளிபள்ளம் கிராமத்தில் இளங்காளியம்மன் கோவில் பகுதியில் நேற்று (ஜூலை .10) இரவு தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் இறந்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?
Next Story