கல்லூரியில் மாணவர் மன்றம் தொடக்க விழாவில் எம்பி

மதுரை கருமாத்தூர் கல்லூரியில் மாணவர் மன்றம் தொடங்கப்பட்டது
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் மாணவர் மன்றம் தொடக்க விழா இன்று( ஜூலை .11)நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அன்பரசு தலைமை தாங்கினார். பேராசிரியை ஜெகதீஸ்வரி வரவேற்றார். செயலாளர் ஆண்டனி சாமி வாழ்த்துறை வழங்கினார். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டார். அவருக்கு இணை முதல்வர் சுந்தர்ராஜ், மாணவர் குழு தலைவர் கணேஷ் ஆகியோர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் பேசியதாவது மாணவர்கள் படிக்கின்ற பருவத்தை அங்கு பயன்படுத்தி முன்னேற வேண்டும். கல்லூரியில் வழங்கப்படும் தலைமைத்துவ பயிற்சியினை நல்வாய்ப்பாக மாணவர்கள் கருத வேண்டும், நாளைய இந்தியாவின் தலைவர்களாக உருவாக கல்லூரி பருவத்திலேயே நேர்மை, உழைப்பு, சமூக நலன், விடாமுயற்சியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளாக செயல்பட்ட அந்தோணி ராஜ், கேபா இமானுவேல், சங்கர நாராயணன் ஆகியோருக்கு எம்.பி. பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேர்மையுடனும், சமூக அக்கறையுடன் நடந்து கொள்வதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முடிவில் கவின் கலை மன்ற செயலாளர் ஆதித்யா நன்றி கூறினார்.
Next Story