நின்றிருந்த நபர் மீது, டூவீலர் மோதியதில் மூன்று பேர் படுகாயம்

X

குமாரபாளையம் அருகே நின்றிருந்த நபர் மீது, டூவீலர் மோதியதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
குமாரபாளையம் அருகே கொல்லப்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 32. லாரி ஓட்டுனர். இவர் சேலம், கோவை புறவழிச்சாலையில் பல்லக்காபாளையம் பிரிவு பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த யமஹா 2 சக்கர வாகனம், இவர் மீது மோதியதில் இரண்டு சக்கரம் வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுனர் பெருந்துறையை சேர்ந்த சரவணன், 25, இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பிரதீஷா, 21, உள்ளிட்ட மூவரும் கீழே விழுந்தனர் இதில் பலத்த காயமடைந்த மூவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story